Thursday, September 11, 2014

ஸ்ரீ ராம ஜெயம்;

                                                        ஸ்ரீ ராம ஜெயம்;

                           அன்பார்ந்த வாசக பெருமக்களுக்கு வணக்கம்

  நமது ஊரில் நேற்று ஸ்ரீ ராமபிரானின் ரதமானது அதிகாலை முதல் இரவு                          
வரை நமது ஊர் மக்களுக்கு தரிசனம் வழங்கியது. அந்த ரதத்தில் ஸ்ரீ ராமன்,                                                                                                                                                                                     சீதை, லெச்சுமணன், ஹனுமான்  மட்டும் சிலர் தரிசனம் தந்தனர் .


                                                                                                                            

                 அதன் பிறகு இரவு சுமார் 8;30 மணி அளவில் இராமாயணம் திரைப்படமானது போடப்பட்டது .





பண்டையகால முறையல் திரை அமைத்து போடப்பட்டது. இதனை மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

Monday, September 8, 2014

விநாயகர் சதுர்த்தி;

விநாயகர் சதுர்த்தி;

                              நமது ஊரில் (29-8-2014) அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைக்கப்பட்டது.

                             வினாயக்கருக்கு பிடித்த அவல், பொறி, கடலை ஆகியவை படைத்து தினம்தோறும் வழிபட்டுவந்தனர்.
             

                             பத்து நாட்களுக்கு பிறகு நேற்று (7-9-2014) அவரை முக்கடல் சங்கமிக்கும் இடமாம் நமது கன்னியாக்குமரி அங்கு கொண்டு சென்று பக்தர்களால் கரைக்கப்பட்டது.

Sunday, August 31, 2014

            நமது ஊரை சார்ந்த தங்கமோகன் என்பவருக்கு கடந்த (29-8-2014) வெள்ளி கிழமை அன்று பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு அனைவருடைய முன்னிலையில் நிச்சயதார்த்தம்  நடைபெற்றது



                             இவர்களின்
         

புதுமனை புகுவிழா அழைப்பிதழ் ;

                                      புதுமனை புகுவிழா அழைப்பிதழ் ;



                   நமது ஊரில் இன்று புதுமனை புகுவிழா நமது ஊரை சார்ந்த
                                                                                                                                                                                                                                  கு.எழில்குமார்                                                                                                                                     
                                                               எ. ஜெயலெட்சுமி 
                   
                                 இவர்களுடைய     புதுமனை புகுவிழா அழைப்பிதழ் 

                                 அனைவரையும் வருக வருக என வரவேற்பது அவர்களின் 
                                                                           
                                                                             புதல்வன்      
      

                       
                    அனைவரும் வருக புதிய இல்லத்தை கண்டு மகிழ்க.

Saturday, August 16, 2014

நமது ஊர் கல்லடி மாடசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் ;

            நமது ஊர் கல்லடி மாடசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் ;

           நமது ஊர் கல்லடி மாடசுவாமி கோவிலில் (15-8-2014) அன்று மதியம் சுவாமி அருள் பாவிக்கவில்லை இதனால் பக்தர்கள் மிகவும் வருத்தத்திற்கு                                                                       ஆளானார்கள்.



 ஆனால் அதன் பிறகு நடந்த  நள்ளிரவு  பூஜையில் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் அழகான முறையில் கிடைத்தது. இதனால் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர் . 


இரவு நேரத்தில் சுவாமிக்காக சிறப்பு அலங்கார பூஜை நடந்தது இதில்  பூப்படையல் அமைத்து அதன் மீது சுவாமி துள்ளி குதித்தக்காட்சி அடடா அடடடடா  அதைக்காண கண்கோடி வேண்டும் .


நீங்களும் அதை கண்டு மகிழ்ச்சி அடையுங்கள் ...

அதன் பிறகு அனைத்து மக்களுக்காகவும் சமபந்தி விருந்து வழங்கப்பட்டது 


நன்றி வணக்கம் .....

நமது ஊரில் திருவிழா ;


 நமது ஊரில் திருவிழா ;
                             


                   நமது ஊர்  அருள்மிகு ஸ்ரீ கல்லடி மாடசுவாமி திருக்கோவில்                                 கொடைவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
                                                     

                                         கல்லடி மாடனின் அருள் பெருக 




திருவிளக்கு பூஜையை தொடர்ந்து வில்லிசை நடைபெற்றது 


அனைவரும் கண்டுகளிக்கவும் .

Saturday, August 9, 2014

இந்தியாவின் பத்து உயரமான சிகரங்கள்


இந்தியாவின் பத்து உயரமான சிகரங்கள்

இந்தியாவின் உயரமான பத்து சிகரங்கள்1. கஞ்சன் ஜங்கா சிகரம் – சிக்கிம் – 8,586 மீட்டர்
2. நந்தாதேவி சிகரம் – உத்தர்காண்ட் – 7817 மீட்டர்
3. சால்ட்டாரோ காங்ரி சிகரம் – ஜம்மு – 7742 மீட்டர்
4. க்யாங்ட்டோ சிகரம் – அருணாசல் – 7000 மீட்டர்
5. தொட்டபெட்டா சிகரம் – தமிழ் நாடு – 2637 மீட்டர்
6. காயங் சிகரம் – மணிப்பூர் – 3114 மீட்டர்
7. ஆனைமுடி சிகரம் – கேரளம் – 2695 மீட்டர்
8. சரமாட்டி சிகரம் – நாகலாந்து – 3841 மீட்டர்
9. சான்ட்க்ஃபூ சிகரம் – மேற்கு வங்காளம் – 3638 மீட்டர்
10. லியோ சர்ஜில் சிகரம் – இமாசல் – 6816 மீட்டர்

Wednesday, July 30, 2014

நமது ஊரில் இன்று ஆடி பூர திருவிழா

                                          நமது ஊரில் இன்று ஆடி பூர திருவிழா 


                                              இன்று நமது ஊர் முத்தாரம்மன் கோவிலில் ஆடி பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.





இதனல் அணைத்து பொதுமக்களும் அம்மன் தரிசனம் பற்று பிரசாதத்தை பெற்று மகிழ்ச்சி அடைந்தனர் 

Thursday, July 17, 2014

பிரதோஷம் என்றால் என்ன ?

பிரதோஷம் என்றால் என்ன ?

http://madanpillaitharmam.blogspot.in/
பிரதோஷம்: அனைத்து தோஷங்களும் ஒடுங்கும் காலம் என்று பொருள் . 

தேய்பிறை திரயோதசி சனிக்கிழமை ஆகியவை கூடியிருந்தால் மகாபிரதோஷம்.சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த மகாபிரதோஷம்.

தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான ஒன்றரை மணி நேரம் பிரதோஷ காலமாகும். 

இந்த நேரத்தில் சிவபெருமானை தரிசிப்பது மிக விசேஷமானது.

பதினொரு பிரதோஷங்கள் தரிசனம் செய்தல் ஒரு முழு கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்த பலன் கிடைக்கும். பாவமே செய்து கொண்டு பிரதோஷம் செய்வதால் ஒரு புண்ணியமில்லை.

பிரதோஷ நேரம் சூரிய அஸ்தமனத்துக்கு முன்னும் பின்னும் ஒன் அரை (1-1/2) மணி நேரம் மணிநேரம்.

ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது. 

சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. 

எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.

Wednesday, July 16, 2014

நிஷ்களங் மகாதேவ்: கடல் நடுவே ஒரு சிவன் கோயில். கடல் உள்வாங்கும் ஒரு அதிசயம்!

நிஷ்களங் மகாதேவ்: கடல் நடுவே ஒரு சிவன் கோயில். கடல் உள்வாங்கும் ஒரு அதிசயம்!

நிஷ்களங் மகாதேவ் கோயில்-கடற்கரையில் இருந்து 

கடல் உள்வாங்கிய பிறகு -கோயிலின் தோற்றம் 

கடல் நடுவே இருக்கும் சிவனுக்கு ஆராதனை

சமீபத்தில் சன் டி.வியில் ஒளிபரப்பட்டு மிகப் பிரபலமடைந்த கடல் கோயில்  நிகழ்ச்சியை பார்க்கவில்லையா என என் நண்பர் ஒருவர் கேட்டபோது, இன்டர்நெட் துணை இருக்கும்போது என்ன கவலை என்று நினைத்துக் கொண்டு இந்த நிகழ்ச்சியையும், அதன் பின்புல தகவல்களையும் தேடிய போது பல ஆச்சரியமான விஷயங்களை சந்திக்க முடிந்தது.

குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் கொலியாக் என்ற இடத்தில் இருக்கும் இந்த அற்புதமான கோயிலைப் பற்றி:

கொலியாக் பாவ்நகரில் இருந்து 23 கி.மீ. கிழக்கில் இருக்கிறது. அரபிக் கடலின் ஓரத்தில் இருக்கும் இந்த சின்ன கிராமத்தில் மாதம் ஒருமுறை  இந்த அற்புதம் நிகழ்கிறது. 

இங்கு கடல் நடுவே ஒரு கொடிக் கம்பமும், ஒரு கல் தூணும் மிகத் தொலைவிலிருந்தே தெரிகின்றன. ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு அடுத்த நாள் காலை கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் கூடுகிறது.  காலை சுமார் 9  மணிக்கு மேல் மெதுவாக கடல் உள்வாங்குகிறது. கொஞ்சம், கொஞ்சமாக கல் தூண் மற்றும் கொடிக்கம்பம் தெளிவாகத் தெரிவதுடன், ஒரு பெரிய சமவெளியில் சிறிய இடைவெளியில் 5 சிவலிங்கங்களும் காட்சி தருகின்றன. பக்தர்கள் நிதானமாக கடல் உள்வாங்கிவிட்ட மணல் பரப்பில் நடந்து சென்று கோயிலை அடைகிறார்கள். கையில் கொண்டுவந்துள்ள பூ மற்றும் பால் ஆகிவற்றை அங்குள்ள லிங்கம் ஒவ்வொன்றின் மேலும் படைக்கிறார்கள். பஜனை செய்கிறார்கள். கடற்கரையில் இருந்து கிட்டத்தட்ட
1.5 கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்த கடல் கோயில். நிஷ்களங் மகாதேவ் என்றால் பாவத்தைப்  போக்குகிறவர், எந்தவித களங்கமும் இல்லாதவர் என்று பொருள் சொல்கிறார்கள்.

மாலை நெருங்குகிறது. ஒவ்வொருவராக கடற்கரைக்கு திரும்பி வர ஆரம்பிக்கும்போது கடல் மீண்டும் அந்தக் கோயிலை முழுதாக ஆக்கிரமிக்கிறது. மீண்டும் கொடிக் கம்பமும், கல் தூணும் மட்டுமே தெரிகின்றன. நண்பர் சிவா இந்தப் பதிவை படித்துவிட்டு, இதுபோன்ற கடல் உள்வாங்கும் சமாச்சாரம் இந்தியாவிலேயே அந்தமான், லட்சத்தீவு ஆகிய இடங்களில் மாதம் ஒரு முறை கடல் உள்வாங்குகிறது, ஆங்கிலத்தில் இதை இஸ்துமஸ் (Isthumus) என்று சொல்லியிருக்கிறார். நன்றி நண்பரே. உண்மைதான், பல இடங்களில் கடல் இது போல உள்வாங்கலாம், ஆனால், அந்தக் கடல் நடுவே ஒரு புராதனமான சிவன் கோயில் இருப்பது இங்கு மட்டுமே, அதுவே இந்த இடத்தின் சுவாரசியம்.

பாண்டவர் காலத்து கோயில் என்கிறார்கள். உண்மை அந்த சிவனுக்கே வெளிச்சம். 

Saturday, July 12, 2014

பாடிடுக பாடிடுக பரந்தாமன் மெய்ப்புகழை பாடிடுக மூடமதியே!

சிறுவயதில் நிறைய தடவை இந்தப் பாடலின் அழகில் மயங்கிக் கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறேன். அப்போதெல்லாம் யார் எழுதியது, யார் பாடியது என்றெல்லாம் தெரியாது. இது ஒரு முதன்மையான வடமொழித் துதி நூலின் மொழிபெயர்ப்பு என்றும் தெரியாது.

அன்று பெற்ற அமைதி இன்றைக்கும் இந்தப் பாடலைக் கேட்கும் போது கிடைக்கிறது. நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

பாடிடுக பாடிடுக பரந்தாமன் மெய்ப்புகழை பாடிடுக மூடமதியே!
பாடுவதில் தீர்ந்துவிடும் பழி பாவம் அத்தனையும் பரந்தாமன் சொன்ன விதியே!

(பாடிடுக பாடிடுக)

பாடுவதை விட்டுவிட்டுப் பாணினி இலக்கணத்தைப் பற்றுவதில் நன்மை வருமோ?
பாய் விரித்த வேளை தனில் காலனவன் சன்னிதியில் பாணினியம் காவல் வருமோ?

(பாடிடுக பாடிடுக)



மாடு மனை தேடுவதும் வல்ல நிலை கூடுவதும் வாலிபம் இருக்கும் வரை தான்!
வாசமொடு பாசமொடு வந்துறவு நாடுவதும் வரவுகள் நிலைக்கும் வரை தான்!
ஓடி விடும் மேனிதனில் கோடி நரை தோன்றிய பின் கூடுவது என்ன சுகமோ?
கூடும் விறகோடு வெறும் கூடு என வீழ்ந்த பி(ன்)னர் கோவணமும் கூட வருமோ?

நாடிவிடு கண்ணன் அடி! தேடிவிடு கண்ணன் புகழ்! நண்ணுவது அந்த சுகமே!
நாயகனை மாயவனை தூயவனை மாலவனை நல்லவனைப் பாடு மனமே!

(பாடிடுக பாடிடுக)

Friday, July 11, 2014

தமிழ்நாட்டின் தலை விதி

தமிழ்நாட்டின் தலை விதி

சோற்றுக்கு அரிசி இலவசம்

மாவாட்ட, மசாலா அரைக்க
க்ரைன்டர், மிக்சி
இலவசம்.

வியர்க்காத உடலுக்கு
காற்று வாங்க மின்விசிறியும்
இலவசம்
உண்ட களைப்பு நீங்க
கண்டு காண தொலைக்காட்சி
இலவசம்

எஞ்சிய பொழுது வலையில் மேய
மாணவர்களுக்கு மடிக்கணினி
இலவசம்.

படிப்பு ஏறாமல் பரிதவித்து போனால்
பட்டிதொட்டியில் படுத்துறங்க
ஆடு, மாடுகள்
இலவசம்.

தாலிக்கு தங்கம் இலவசம்
குடும்ப கட்டுப்பாட்டுக்கு ஐநூறு
கர்ப்பிணிக்கு பத்தாயிரம்
முடிவை மக்களிடையே விட்டு
யோசிக்க நேரம்
இலவசம்.

இலவசம் என்று கொச்சை படுத்தாமல்
விலையில்லா அரிசி, மிக்ஸி, மடிக்கணினி
என பக்குவமா பெயர் வைத்து
போதையில் பொருளீட்டி
மேதைகள் செய்யும் ஆட்சி
வாழ்க தமிழகம்.

Tuesday, July 8, 2014

விநாயகப்பெருமானின் உருவப்படம் அச்சிடப்பட்ட நாணயத் தாள்

விநாயகப்பெருமானின் உருவப்படம் அச்சிடப்பட்ட நாணயத் தாள் 

Photo: விநாயகப்பெருமானின் உருவப்படம் அச்சிடப்பட்ட நாணயத் தால் .
உலகில் மிகப்பெரிய இஸ்லாமிய நாடு இந்தோனேசியா ஆகும். இந்தோனேசிய நாடானது 1998 ம் ஆண்டில் இந்துசமயத்தின் கடவுளான விநாயகப்பெருமானின் உருவப்படத்தினை தனது நாணயத் தாளில் அச்சிட்டு பெருமைப்படுத்தியது.

விநாயகப்பெருமானின் உருவப்படம் அச்சிடப்பட்டது 20,000 ருபியா நாணயத்தாளிலாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விநாயகப்பெருமானின் உருவப்படம் அச்சிடப்பட்ட நாணயத் தாள் 
உலகில் மிகப்பெரிய இஸ்லாமிய நாடு இந்தோனேசியா ஆகும். இந்தோனேசிய நாடானது 1998 ம் ஆண்டில் இந்துசமயத்தின் கடவுளான விநா
யகப்பெருமானின் உருவப்படத்தினை தனது நாணயத் தாளில் அச்சிட்டு பெருமைப்படுத்தியது.

விநாயகப்பெருமானின் உருவப்படம் அச்சிடப்பட்டது 20,000 ருபியா நாணயத்தாளிலாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Sunday, July 6, 2014

நவக்கிரகங்களை வழிபாடு செய்யும் முறை

நவக்கிரகங்களை வழிபாடு செய்யும் முறை

http://madanpillaitharmam.blogspot.in/
கோவிலுக்குச் சென்று வழிபடும் போது அங்குள்ள அனைத்து தெய்வங்களையும் தரிசித்த பின்னர் கடைசியில்தான் நவக்கிரகங்களை வழிபட வேண்டும். நவக்கிரகங்களை வழிபாடு செய்யும் போது நேருக்கு நேராக நின்று தரிசிக்கக் கூடாது. 


சற்று சாய்வாக நின்றே தரிசனம் செய்ய வேண்டும். மேலும் நவக்கிரகங்களை தரிசித்த பிறகுசிவனையோவிநாயகரையோ வழிபடக் கூடாது. நவக்கிரகங்களை ஒன்பது முறை வலம் வரும் போதுவலது புறமாக ஏழுமுறையும்இடது புறமாக இரண்டு முறையும் வலம் வர வேண்டும். 

Wednesday, July 2, 2014

கணவன் உண்ட அதே இலையிலோ அல்லது தட்டிலோ மனைவி உண்ண காரணம்!

கணவன் உண்ட அதே இலையிலோ அல்லது தட்டிலோ மனைவி உண்ண காரணம்!

திருமணம் ஆன பெண்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்லுவார்கள் அது ஏன் என்று தெரியுமா?

கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்,...

அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம்,பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.

கணவனில் எச்சிலில் இருக்கும் புதிய ஜீன்கள் சாப்பாட்டின் மூலம் மனைவியின் உடலில் கலந்து அது அவள் பாலூட்டும் குழந்தைக்கு கிடைக்கவே (ஜீன் அப்டேசன்) இந்த ஏற்பாடு.

என்ன தான் கணவனின் ஜீன் குழந்தைக்குள் இருந்தாலும் அது லேட்டஸ்டாக அப்டேட் ஆகவே இந்த ஏற்பாடு. மேலும் இது வயிற்றிற்குள் இருக்கும் குழந்தையின் முதல் ஆறு மாதத்திற்குள் உண்டாகும் வளர்சிதை மாற்றங்களுக்கும், பிறந்தபின் முதல் ஆறு மாதங்களுக்கு ஏற்படும் வளர்ச்சிக்கும் மிக மிக அத்தியாவசமாகிறது என்று மேல்நாட்டு அறிவியல் வல்லுனர்கள் கண்டறிந்து ஆச்சரியப்படுகின்றனர்.

Tuesday, July 1, 2014

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!

பொட்டு :

பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது....

தோடு :

மூளையின் செய
ல் திறன் அதிகரிக்கும்.கண்பார்வை திறன் கூடும் .

நெற்றிச்சுட்டி :

நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனை சரி செய்கிறது.

மோதிரம் :

பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது..ப்ரேசிலட்,வாட்ச்,காப்பு அணிவதும் பாலுறுப்பின் புள்ளிகளை தூண்டும்.

செயின் , நெக்லஸ் :

கழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும் .

வங்கி :

கையின் பூஜை பகுதியில் இறுக்கமான அணிகலன்கள் அல்லது கயிறுகள் அணியும் பொது உடலில் ரத்த ஓட்டம் சீராகி பதற்றம்படபடப்பு ,பயம் குறைகிறது .மார்பக புற்று நோய் வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே உருதிபடுதப்படிருகிரதுலம்பாடி பெண்களுக்கு மார்பக புற்று நோய்
வருவது இல்லை.கரணம் மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு மேல்
வரை நெருக்கமாக வளையல்களை அணிவதால் மார்பு பகுதியின் ரத்த ஓடம் சீராக வைத்திருக்க உதவுகிறது.

வளையல் :

வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது.முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யபடுகிறது.இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.

ஒட்டியாணம் :

ஒட்டியாணம் அணியும் போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக
தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும்.வயிற்று பகுதிகள் வலு வடையும்.

மூக்குத்தி :

மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்னு உண்டு.அந்த புள்ளிகள் தூண்டப்படும் பொது அது சமந்தமான நோய்கள் குணமாகும் .மூக்குத்தி அணியும் பெண்கள் சில நாட்களில் விட்டு சிக்கல் சரியாகி வருவதை உணரலாம் .

கொலுசு :

கல்லீரல்,மண்ணீரல்,பித்தப்பை,சிறுநீரகம், சிறுநீர்ப்பை,வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு.கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம் .

மெட்டி :

மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும் .செக்ஸுவல் ஹார்மோன்கள் தூண்டும்.பில்லாலி என்பது குழந்தை பிறந்தவுடன் 3வது விரலில் அணியும்போது சில புள்ளிகள் தூண்டப்பட்டு பால் சுரப்பை அதிகப்படுத்தும்

Saturday, June 28, 2014

நமது ஊர் பெருமாள் சுவாமி ஆலய திருவிழாவை முன்னிட்டு வெள்ளி கிழமை இரவு கும்பாட்டம் நிகழ்ச்சி நடந்தது .

நமது ஊர் பெருமாள் சுவாமி ஆலய திருவிழாவை முன்னிட்டு வெள்ளி கிழமை இரவு கும்பாட்டம்  நிகழ்ச்சி நடந்தது .
                             சுவாமி தரிசனத்திற்கு பிறகு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை             நள்ளிரவு  1மணி முதல் காலை 5 மணி வரை கண்டுகளித்தனர்.
நிங்களும் இதை கண்டு மகிழ்ச்சி அடையுங்கள் .
இனி மற்றொரு சிறப்பு நிகழ்ச்சியில் தங்களை சந்திக்கும் வரை தங்களிடம் இருந்து விடை  பெறுவது மகராஜபுரம்  செய்திகள் .
                                                 நன்றி வணக்கம் . 

கலை நிகழ்ச்சி ; பெருமாள் சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு சிறுவர் சிறுமிகளுக்கான கலை நிகழ்சிகள் நடந்தது .

கலை நிகழ்ச்சி ;
                           பெருமாள் சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு சிறுவர் சிறுமிகளுக்கான கலை நிகழ்சிகள் நடந்தது .

கலை நிகழ்ச்சி ஆனது நமது பெருமாள் சுவாமி கோவிலில் உள்ள கலையரங்கத்தில் வைத்து நிகழ்ந்தது .இதில் பல சிறுவர் சிறுமிகள் கலந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர் .இதனை மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர் .

Friday, June 27, 2014

இரவு நேர சுவாமி தரிசனத்திற்கான காட்சிகள்

                                இரவு நேர சுவாமி தரிசனத்திற்கான காட்சிகள்
அனைவரும் இதனை கண்டு சுவாமியின் அருள் பெற்று செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .திருவிழாவை கண்டுகளித்த அனைவருக்கும் நன்றி

                               பெருமாள் சுவாமி கோவிலின் இரவு காட்சி







இரவு நேரத்தில் ஆலயமானது மிகவும் அழகாக இருக்கிறது அதனை காண கண்கோடிவேண்டும் .இருந்தாலும் அந்த அழகான காட்சியை உங்களுக்காக
சமர்பிக்கிறோம் 
மகராஜபுரம் செய்திகள் ;
                                 மகரஜபுரத்தில்  நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த திருவிழா ஆனது மிகவும் அழகான  முறையல் நடந்து வருகிறது ,அதன் புகைப்படங்கள் இதோ உங்களது பார்வைக்கு
                                                                வடக்குவாயில்
                                                             மேற்க்கு வாயில்
                                                        கோவில் நுழை வாயில்
                                                            பக்தர்களின் கூட்டம்,
                                                      சுவாமிகளின் பரவசநிலை
                                                         மாபெரும் அன்னதானம்
நேற்று மாலை திருவிழா  ஆனது துவங்கியது அதனை தொடர்ந்து திருவிளக்கு பூஜை பின்பு தீப ஆராதனை 
சுவாமிக்கு அலங்கரபூஜை நடந்தது .அந்த நேரத்தில் நமது படபிடிப்பு குழு அங்கு இல்லாத காரணத்தினால் அந்த புகைப்படங்கள் நமக்கு கிடைக்கவில்லை  .


அணைத்து மக்களும் மிக்க மகிழ்ச்சி 
இன்று இரவு கும்பாட்டம் நிகழ்ச்சி உள்ளது 
அதன் புகைப்படங்களை நாளை பார்க்கலாம் 
அனைவருக்கும் நன்றி வணக்கம் 

Saturday, June 21, 2014

நமது ஊர் நியாய விலை கடையின் அருகில் சுகாதாரக்கேடு

மகாராஜபுரம் செய்திகள் ;
                   நமது ஊர் நியாய விலை  கடையின் அருகில் சுகாதாரக்கேடு




 நமது ஊர் நியாய விலை கடையின் அருகில் அதிக மாசுக்கள்  அடைந்து இருப்பதால் சுகாதாரக்கேடு உண்டாகிறது .இதனால் அந்த பகுதி குப்பைமேடகக் காணப்படுகிறது இந்த குப்பைகளால்  பல பாதிப்புகள வருவதற்கு வாய்புகள் உள்ளது .எனவே அதனை உடனே அகற்றுவது நல்லது  ...........

Friday, June 20, 2014

நமது ஊரில் உள்ள தெருக்கள் தங்களது பார்வைக்கு

மகராஜபுரம் செய்திகள் :
                                             
                           
   நமது ஊரில் உள்ள தெருக்கள் தங்களது பார்வைக்கு 
                                                                மேற்கு தெரு
                                                                 கிழக்கு தெரு 
                                                                 தெற்கு தெரு 
                                                                வடக்கு தெரு
                                                               கோயில் தெரு
                                                               குளத்து  தெரு
                                                                    நடு  தெரு 
                                                                   நடு   தெரு
                                                                 சன்னதி தெரு
தெருக்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லை ஏன் என்று தெரியவில்லை 
நமது படபிடிப்பு குழு மட்டும் தங்களுக்காக புகைப்படங்களை எடுத்து 
வெளிட்டுள்ளது அவர்களுக்கு நன்றி .....