நவக்கிரகங்களை வழிபாடு செய்யும் முறை
கோவிலுக்குச் சென்று வழிபடும் போது அங்குள்ள அனைத்து தெய்வங்களையும் தரிசித்த பின்னர் கடைசியில்தான் நவக்கிரகங்களை வழிபட வேண்டும். நவக்கிரகங்களை வழிபாடு செய்யும் போது நேருக்கு நேராக நின்று தரிசிக்கக் கூடாது.
சற்று சாய்வாக நின்றே தரிசனம் செய்ய வேண்டும். மேலும் நவக்கிரகங்களை தரிசித்த பிறகு, சிவனையோ, விநாயகரையோ வழிபடக் கூடாது. நவக்கிரகங்களை ஒன்பது முறை வலம் வரும் போது, வலது புறமாக ஏழுமுறையும், இடது புறமாக இரண்டு முறையும் வலம் வர வேண்டும்.
No comments:
Post a Comment