Saturday, June 28, 2014

நமது ஊர் பெருமாள் சுவாமி ஆலய திருவிழாவை முன்னிட்டு வெள்ளி கிழமை இரவு கும்பாட்டம் நிகழ்ச்சி நடந்தது .

நமது ஊர் பெருமாள் சுவாமி ஆலய திருவிழாவை முன்னிட்டு வெள்ளி கிழமை இரவு கும்பாட்டம்  நிகழ்ச்சி நடந்தது .
                             சுவாமி தரிசனத்திற்கு பிறகு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை             நள்ளிரவு  1மணி முதல் காலை 5 மணி வரை கண்டுகளித்தனர்.
நிங்களும் இதை கண்டு மகிழ்ச்சி அடையுங்கள் .
இனி மற்றொரு சிறப்பு நிகழ்ச்சியில் தங்களை சந்திக்கும் வரை தங்களிடம் இருந்து விடை  பெறுவது மகராஜபுரம்  செய்திகள் .
                                                 நன்றி வணக்கம் . 

கலை நிகழ்ச்சி ; பெருமாள் சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு சிறுவர் சிறுமிகளுக்கான கலை நிகழ்சிகள் நடந்தது .

கலை நிகழ்ச்சி ;
                           பெருமாள் சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு சிறுவர் சிறுமிகளுக்கான கலை நிகழ்சிகள் நடந்தது .

கலை நிகழ்ச்சி ஆனது நமது பெருமாள் சுவாமி கோவிலில் உள்ள கலையரங்கத்தில் வைத்து நிகழ்ந்தது .இதில் பல சிறுவர் சிறுமிகள் கலந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர் .இதனை மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர் .

Friday, June 27, 2014

இரவு நேர சுவாமி தரிசனத்திற்கான காட்சிகள்

                                இரவு நேர சுவாமி தரிசனத்திற்கான காட்சிகள்
அனைவரும் இதனை கண்டு சுவாமியின் அருள் பெற்று செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .திருவிழாவை கண்டுகளித்த அனைவருக்கும் நன்றி

                               பெருமாள் சுவாமி கோவிலின் இரவு காட்சி







இரவு நேரத்தில் ஆலயமானது மிகவும் அழகாக இருக்கிறது அதனை காண கண்கோடிவேண்டும் .இருந்தாலும் அந்த அழகான காட்சியை உங்களுக்காக
சமர்பிக்கிறோம் 
மகராஜபுரம் செய்திகள் ;
                                 மகரஜபுரத்தில்  நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த திருவிழா ஆனது மிகவும் அழகான  முறையல் நடந்து வருகிறது ,அதன் புகைப்படங்கள் இதோ உங்களது பார்வைக்கு
                                                                வடக்குவாயில்
                                                             மேற்க்கு வாயில்
                                                        கோவில் நுழை வாயில்
                                                            பக்தர்களின் கூட்டம்,
                                                      சுவாமிகளின் பரவசநிலை
                                                         மாபெரும் அன்னதானம்
நேற்று மாலை திருவிழா  ஆனது துவங்கியது அதனை தொடர்ந்து திருவிளக்கு பூஜை பின்பு தீப ஆராதனை 
சுவாமிக்கு அலங்கரபூஜை நடந்தது .அந்த நேரத்தில் நமது படபிடிப்பு குழு அங்கு இல்லாத காரணத்தினால் அந்த புகைப்படங்கள் நமக்கு கிடைக்கவில்லை  .


அணைத்து மக்களும் மிக்க மகிழ்ச்சி 
இன்று இரவு கும்பாட்டம் நிகழ்ச்சி உள்ளது 
அதன் புகைப்படங்களை நாளை பார்க்கலாம் 
அனைவருக்கும் நன்றி வணக்கம் 

Saturday, June 21, 2014

நமது ஊர் நியாய விலை கடையின் அருகில் சுகாதாரக்கேடு

மகாராஜபுரம் செய்திகள் ;
                   நமது ஊர் நியாய விலை  கடையின் அருகில் சுகாதாரக்கேடு




 நமது ஊர் நியாய விலை கடையின் அருகில் அதிக மாசுக்கள்  அடைந்து இருப்பதால் சுகாதாரக்கேடு உண்டாகிறது .இதனால் அந்த பகுதி குப்பைமேடகக் காணப்படுகிறது இந்த குப்பைகளால்  பல பாதிப்புகள வருவதற்கு வாய்புகள் உள்ளது .எனவே அதனை உடனே அகற்றுவது நல்லது  ...........

Friday, June 20, 2014

நமது ஊரில் உள்ள தெருக்கள் தங்களது பார்வைக்கு

மகராஜபுரம் செய்திகள் :
                                             
                           
   நமது ஊரில் உள்ள தெருக்கள் தங்களது பார்வைக்கு 
                                                                மேற்கு தெரு
                                                                 கிழக்கு தெரு 
                                                                 தெற்கு தெரு 
                                                                வடக்கு தெரு
                                                               கோயில் தெரு
                                                               குளத்து  தெரு
                                                                    நடு  தெரு 
                                                                   நடு   தெரு
                                                                 சன்னதி தெரு
தெருக்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லை ஏன் என்று தெரியவில்லை 
நமது படபிடிப்பு குழு மட்டும் தங்களுக்காக புகைப்படங்களை எடுத்து 
வெளிட்டுள்ளது அவர்களுக்கு நன்றி .....

Thursday, June 19, 2014

நமது ஊரில் மிதமான மழை

நமது ஊரில் மிதமான மழை 
                                     வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது 

நேற்று மற்றும் இன்று காலை நமது ஊரில் சற்று மிதமான மழை பெய்தது இதனால்  ஊர் மக்கள் மிகவும் மகிழ்ச்சி...... யாரும் கவலை பட  வேண்டாம் ஊர் நன்றாக உள்ளது ......நாங்கள் இருக்கிறோம் ....

                                                                                   இப்படிக்கு, 
                                                                                மகராஜபுரம் செய்திகள். 

Wednesday, June 18, 2014

கோவிலின் சிறப்பு தோற்றம்

மகா கும்பாபிசேகத்தை முன்னிட்டு புதிதாக அமைக்கப்பட்ட சிலைகள் பின் வருமாறு. இதுவே கோவிலின் சிறப்பு தோற்றம் ஆகும்........ 











நமது ஊர் பெருமாள் சுவாமி கோவிலில் வர்ணம் பூசும் பணி

நமது ஊர் பெருமாள் சுவாமி கோவிலில் வர்ணம் பூசும் பணி ஆனது மிகவும் சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது அதன் படங்கள் பின் வருமாறு.......                     (26-6-2014) வியாழன் அன்று  நமது  பெருமாள் சுவாமி கோவிலில் திருவிழா நடைபெறவுள்ளது அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம் .......


Thursday, June 12, 2014

அரசியல் தலைவர்களுக்கு குரு பெயர்ச்சி எப்படி?ஜோதிடர்கள் கணிப்பு


வரும் 13ம் தேதிவெள்ளிக்கிழமை மாலை 6:04மணிக்குகடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார் குரு பகவான். கடக ராசியில்குரு பகவான் உச்சமாக பிரவேசிக்கும் நேரத்தில்குரு பகவானின் ஆட்சி வீடான தனுசு ராசியில்சந்திரன் சஞ்சரிப்பதுடன்,அதுதனுசு லக்னமாகவும் அமைகிறது. இதன் காரணமாகஇந்த குருபெயர்ச்சி,மேலும் சிறப்படைகிறது. குரு பெயர்ச்சியான எட்டாம் நாளேகுரு பகவானின் ஆட்சி வீடான மீனத்தில்,கேது பகவானும்புதன் பகவானின் உச்ச வீடான கன்னியில்ராகு பகவானும்வரும் 21ம் தேதி முதல் சஞ்சரிக்க உள்ளனர்.

இந்த நேரத்தில்அரசியல் கட்சி தலைவர்களுக்குகுருராகுகேது கிரகங்களால் உண்டாகும் பலன்கள் குறித்துஜோதிடர்கள் கூறியதாவது:

ஜோதிடர் பரணிதரன்திருக்கோவிலூர்:

பிரதமர் நரேந்திர மோடி: இக்காலத்தில்இவர் தொட்டதெல்லாம் துலங்கும்நினைத்ததெல்லாம் நடக்கும். பிரதமர் பதவியின் சிறப்பு வெளிப்படும். ஜூன் 21ல் விருச்சிகத்திற்கு, 11ம் வீடான கன்னிக்கு வரும் ராகு பகவானால்சரித்திரம் படைக்கும் வகையில்பலசாதனைகளை படைப்பார்.பாரதத்தை வலிமைமிக்க நாடாக உருவாக்குவார். ஐந்தாம் வீடான குரு வீட்டில்குரு பார்வையுடன் அமர்ந்துள்ள கேது பகவானால்நாட்டை ஆன்மிக வழியில் கொண்டு செல்வார்.

சோனியா: அதிகாரம்செல்வாக்குபதவிபெருமை எல்லாவற்றையும் இழக்க வேண்டிய நிலையுடன்கடுமையான விமர்சனங்களுக்கும் ஆளாவார். சொந்த கட்சியிலும் எதிர்ப்பு வலுக்கும். கட்சியை காப்பாற்றுவதற்காககடுமையாக போராட வேண்டி இருக்கும். நிறைய இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

ஜெயலலிதா : மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்ப்புகள் எல்லாம் அடங்கும். நேற்று வரை,எதிரிகளாகஎதிர் அணியில் இருந்த பலர்இவரின் தலைமையை ஏற்பர். உடலில் ஆரோக்கியமும்புதிய நம்பிக்கையும் உண்டாகும்.அச்சுறுத்தல்களையும்வழக்குகளையும்,எதிர்ப்புகளையும்சமாளிக்கும் சக்தி உண்டாகும். உடன் இருப்பவர்களில்நம்பிக்கை துரோகிகளையும்தவறானவர்களையும்விரட்டி அடிப்பார்.

கருணாநிதி: இப்போதுள்ள நிலையில்மேலும் சரிவு உண்டாகும். நம்பிக்கைக்கு பாத்திரமாகவும்துணையாகவும் இருந்தோர்ஒவ்வொருவராக விலகுவர். குடும்பத்திலும்,கட்சியிலும் குழப்பம் அதிகரிக்கும். வழக்குகளால் கவனம் சிதறும்.சர்வ வல்லமையுடன்,சூழ்ச்சியாலும்சாதுர்யத்தாலும் கோலோச்சி வந்த துரியோதனன்தனது பலத்தை இழந்து,படையை இழந்துஅனைத்தையும் இழந்ததுகுரு பகவான் மூன்றில் நின்ற காலத்தில் தான்.ஜூன் 21ல் 5ம் வீட்டிற்கு வரும் ராகு பகவான்பல வகைகளில்சோதனைக்கும்,வேதனைக்கும் ஆளாக்குவார். மனைவியாலும்பிள்ளைகளாலும்மனம் பாதிக்கும்.

ஜோதிடர் சிவகுரு ரவிவிழுப்புரம்:
நவக்கிரகங்களில் ராஜ கிரகம் என்று அழைக்கப்படும்குரு உச்சம் பெற்றதால்இந்தியர்களுக்கு,நம் தமிழர்களுக்குஅதிர்ஷ்டம் நிறைந்த ஆண்டாக அமைய உள்ளது. பெண்கள் உயர்ந்த நிலையில் காணப்படுவர். அனைத்து துறைகளிலும்பெண்கள் சாதனை புரிவர்.

பிரதமர் நரேந்திர மோடி: ராசி விருச்சிகம். கட்சி ஜாதகமும் விருச்சிகம். எதிரிகள் செயல் இழந்து விடுவர். இந்த குரு பெயர்ச்சிகட்சிக்கும்இவருக்கும் வெற்றியை சேர்க்கவல்லது.

ஜெயலலிதா: இவருக்கு 12ம் இடத்தில்குரு அமர்ந்து உச்சம் பெறுவதாலும்இவர் சிம்ம ராசி என்பதாலும்இவர் அதிக வெற்றிகளை பெறுவார்.

கருணாநிதி: இவருக்கு குருமூன்றாம் இடத்திற்கு செல்வதால்நன்மை செய்ய மாட்டார். குடும்ப பிரச்னைஅரசியல் குழப்பம் அதிகரிக்கும்.

விஜயகாந்த்: இவரது ராசி துலாம். இவருக்கு ஏழரை சனி நடப்பதால்கட்சி சிதையும் வேதனை உள்ளது.

ராகுல்: இவருக்கு தற்சமயம் குரு இரண்டாம் இடத்தில் உள்ளார். உச்சம் பெற்று உள்ளதால்,வெற்றி உண்டாகும்.

ஸ்டாலின்: இவருக்கு குழப்பம் தொடரும். தோல்விகள் பல உண்டு. நிதானம் தேவை.

ஜோதிடர் சோமசேகரன்ஆற்காடு:

பிரதமர் நரேந்திர மோடி: கட்சியில் உள்ள சில அமைச்சர்களால்சில பாதிப்புகள் ஏற்படும். எதிரிகள் மற்றும் தீவிரவாதத்தால்சில சங்கடங்கள் ஏற்பட்டாலும்இவ்வாண்டின் தலை சிறந்த அரசியல் தலைவர்களில்ஒருவராக திகழ வாய்ப்புள்ளது.

ஜெயலலிதா: மிகப்பெரிய வெற்றியை பெற்றாலும்இவரால் மத்திய அரசில் பங்கு வகிக்க முடியாமல் போனதற்கு காரணம்சுய தசையில்சுய புத்தி நடைபெறுவதுதான். இந்த குரு புத்தி,அக்டோபர் 20ம் தேதி முடிந்தவுடன்மத்திய அரசில்இவரின் முயற்சியால்பல அனுகூலங்களை பெறலாம்.

கருணாநிதி: இவருக்கு 2015 பிப்ரவரி மாதம் முதல்சற்று நல்ல நேரம் ஆரம்பம். உடல் ரீதியாக சற்று வைத்தியம் பார்க்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் பிரச்னைகள்சற்று குறையும்,சிலருக்கு நீதிமன்றத்தால்சில பலவீனங்கள் ஏற்பட்டாலும்இவருடைய ஜாதகப்படி, 2015ல் நல்ல நேரம் துவங்குவதால்பிரச்னைகளை சமாளிக்கலாம்.

ராகுல்: 2017 ஜூன் 28ம் தேதியில்சனி புத்தி துவங்கியதும்நல்ல நேரம் துவங்குகிறது. வரும் காலங்களில்இவருடைய பேச்சில்சொல்லில்ஆழ்ந்த தேர்ச்சியும்முதிர்ச்சியும் காணப்படும்.இவ்வாறுஜோதிடர்கள் தெரிவித்து உள்ளனர்

நன்றி தின மலர் 

Friday, June 6, 2014

இந்துக்களின் விஞ்ஞானம் அறிவியல் பூர்வமான இந்துப் பண்பாடு.

அறிவியல் பூர்வமான இந்துப் பண்பாடு.




இந்துப் பண்பாடு என்பதன் மறுபெயரே இந்தியப் பண்பாடு. நமது பண்பாடு கங்கையைப் போல் புனிதமானதுமானஸரோவர் நீர்போல் தூய்மையானது. பாரதப் பண்பாட்டுக்கு நிகராகக் கூறக்கூடிய அளவில் பாரில் வேறெங்கும் இருந்ததும் இல்லை;இனி இருக்கப் போவதுமில்லை!

நம் பண்பாட்டின் மூலாதாரமே இந்துமதம்தான். வேதங்கள்புராணங்கள்,இதிகாசங்கள்உபநிஷத்துக் கள் ஆகியவையே நமது கலாச்சாரத்தைத் தாங்கும் வலிமையான தூண்கள். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே பாரதத்தின் நதிக்கரையோரங்களில் மிகச்சிறந்த பல நாகரிகங்கள் தழைத்தோங்கியிருந்ததாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்துப் பண்பாடு பாரதப் பெண்களைப் புகழின் சிகரத்துக்கே உயர்த்தியது. அவர்களை சக்தியின் அம்சமாகவே பார்த்தது. வேற்று நாட்டுப் பெண்களுக்கு இல்லாத அச்சம்மடம்நாணம்பயிர்ப்பு போன்றவை இந்துப் பெண்களுக்கு - நம் இந்தியப் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. கற்புக்குக் களங்கம் ஏற்படின்அன்று பாரதப் பெண்கள் தங்கள் இன்னுயிரையே மாய்த்துக் கொண்டதாக இந்திய சரித்திர ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.!

பெண்மையே அழகு. அழகுக்கு மேலும் அழகு செய்தால் சொல்லவா வேண்டும்! பெண்களால் ஆபரணங்கள் அழகு பெற்றதா அல்லது ஆபரணங் களால் பெண்கள் அழகு பெற்றனரா என பாரதத்துப் பெண்கள் பற்றி ஒரு விவாதமே நடத்தலாம். பெண்களுக்கும் பெண்கள் அணியும் ஆபரணங்க ளுக்கும் அவ்வளவு பெருமை உண்டு. அதனால் தானே பெண்களின் ஆபரணங்கள் பெயரால் ஐம்பெரும் காப்பியங்கள் உருவாயின!!

ஆபரணங்களைவிடவும் மிக உயர்ந்ததாகக் கருதப்படும் பெண்களின் மங்கலச் சின்னங்களான- சந்திரனையொத்த முகத்திற்கு மஞ்சள்எழில் பொழியும் நெற்றியிலே திலகம்கூந்தலில் மணம் வீசும் மலர்கள்- இவற்றால் நம் பெண்கள் மற்ற நாட்டுப் பெண்களிலிருந்தும் வித்தியாசப்படுகின் றனர்.!

இதையே கவியரசு கண்ணதாசன்,!

"மலர்கள் சூடி மஞ்சள் பூசி!

வளையல் பூட்டி திலகம் தீட்டி'!

என்று பெண்மையின் இலக்கணத்தைக் கூறுகிறார். !

பாரதத்து ஆடவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. நெற்றியில் விபூதிசந்தனம்குங்குமப் பொட்டுபக்தி நெறியில் ஈடுபாடு. உலகின் பிறநாட்டு மக்களிட மிருந்து நம்மைப் பிரித்துஉயர்த்திக் காட்டுவதே நமது ஆன்மிகப் பண்பாடுதான்.!

வீரத்துறவி விவேகானந்தரைஅவர் உடையைப் பார்த்து "பஞ்சைப் பரதேசிஎன்று ஏளனமாக எக்காளமிட்டது அமெரிக்க சீமான்கள்- சீமாட்டி களின் கூட்டம். அவர்களைத் தனது பண்பால்அடக்கத்தால்நாவண்மையால்சகோதரத்துவப் பிணைப்பால் கட்டியிழுத்துஇந்து எப்படிப் பட்டவன்இந்தியன் எப்படிப்பட்டவன் என்பதை அவர்களுக்குப் புரியவைத்துஅன்னியர்கள் நெஞ்சங்களிலும் இடம் பிடித்தார் விவேகானந்தர்.!

இந்துப் பண்பாட்டை- இந்தியக் கலாசாரத்தைக் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் என்று வர்ணித்த அமெரிக்கர் களை, "சொல்எனும் சாட்டையை வீசிப் பணிய வைத்தார். அமெரிக்கப் பண்பாடே உயர்ந்தது எனக் கூறியவர்களின் நாவை அடக்க, "எங்கள் பாரதத்தின் ஆண்கள் தாரத்தைத் தவிர மற்ற பெண் களைத் தாயாகப் பார்க்கின்றனர். ஆனால் உயர்ந்ததாக நீங்கள் கூறும் உங்கள் பண்பாட்டில் தாயைத் தவிர மற்ற பெண்களைத் தாரமாகப் பார்க்கிறீர்கள்!என்று பதிலளித்தார்.!

இன்று உலக நாடுகள் பலவற்றில் இந்துமதம் மிக வேகமாகப் பரவி வருகிறது. ஆனால் நம் தாய் நாட்டில் இன்று தலைகீழ்நிலையே தென்படுகிறது. கலாச்சாரத்திற்கு மதபேதம்,ஜாதிபேதம்இனபேதம்நிறபேதம் கிடையாது. காரணம் புராதன இந்தியாவில் இந்து மதத்தைத் தவிர வேறெந்த மதமும் இல்லை.!

இன்று பெருவாரியான இந்தியப் பெண்கள் நெற்றியில் திலகம் இடுவது குறைந்து வருகிறது. மங்கலச் சின்னங்கள் மெல்ல மெல்ல மறைந்து வருகின்றன. ஆண்கள் தரப்பிலும் இதே நிலைதான்.!

இந்துமதம் ஏன் நெற்றியில் விபூதி பூச வலியுறுத்தியதுஎதற்காக குங்குமம்சந்தனம் தரிக்க வேண்டும் என்று கூறுகிறது என்பதை ஒவ்வொரு இந்தியனும் தெரிந்திருக்க வேண்டும். எந்த மூடப் பழக்க- வழக்கங்களும் நம் மதத்தில் இல்லை. இந்துமதம் அறிவியல் தத்துவங்களையே பக்தி நெறியில் கூறும் ஒரு அறிவியல் மதம்- அற்புத மதம்- தொலைநோக்குச் சிந்தையுள்ள ஒரே மதம்.!

நம் மதத்து விரதங்களும் அறிவியல் தத்துவப் படியே உள்ளன. அமாவாசைபௌர்ணமி விரதம் இருக்கிறோமேஎதற்காகஇந்த நாட்களில் சூரியசந்திர ஒளிகளில் ஊடுருவி வரும் புறஊதாக் கதிர்களின் தாக்கத்தால் உடல் நலனுக்குக் கெடுதல் விளையும் என்பதால்தான். இக்கதிர்களின் கதிர் வீச்சால்சமைத்த உணவுப் பண்டங்களில் விஷத் தன்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே அன்று உணவைத் தவிர்த்து விரதமிருக்கிறோம். ஏகாதசி விரதமும் அறிவியல் விதிப்படிதான் அமைந்துள்ளது. இரவும் பகலும் ஒரு நொடிப் பொழுதும் நிற்காமல் இயங்கிக் கொண்டிருக்கும் நம் உடல் உறுப்புக் களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டிதான் விரதம் மேற்கொள்கிறோம். எப்போதும் இயந்திரம் ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருந்தால் அதிவிரைவில் பழுதுபட வாய்ப்புள்ளது அல்லவா! "சூரிய கிரகணம்சந்திர கிரகணங்களின்போது கர்ப்பிணிப் பெண்கள் வெளியே நடமாடக்கூடாதுவளரும் கருவுக்குப் பாதிப்பு ஏற்படும்என்று வானியல் விஞ்ஞானிகளும் இன்று கூறு கிறார்கள். இதை இந்துமதம் பழங்காலந் தொட்டே வலியுறுத்தி வருகிறது.!

ரிக்யஜுர்சாமஅதர்வண வேதங்கள் தவிரஐந்தாவது வேதமாகக் கருதப்படுவது ஆயுர்வேதம். ஆயுர்வேதம் என்பது உடற்கூறுவியாதிகள் மற்றும் அதைக் குணப்படுத்தும் ! முறைகளைக் கூறுவது.

நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப் பட்டுள்ளன. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகச் செல்கின்றன. ஆகவே நெற்றிப் பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது. ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப் படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால் நெற்றியில் கைவைத்து உஷ்ணத்தின் தன்மையை அறிகிறோம். வாகனங்க ளின் எஞ்சின் தொடர்ந்து இயங்கும்போது அதிகம் சூடாகும். இந்த சூட்டைக் குறைத்து எஞ்சினுக்கு அதிக ஆயுளைக் கொடுப்பது ரேடியேட்டர். அதுபோல நமது மூளையையும்அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்வதே நாம் நெற்றியில் பூசும் சந்தனக்குழம்பு செய்யும் தலையாய கடமை.

தலையில் ஏற்படும் வியர்வைதலை மேல் விழும் பனித்துளிகள் மற்றும் தண்ணீர் போன்றவற்றின் சிறுபகுதி கெட்டிப்பட்டுத் தலைப்பகுதியில் தங்கிவிடும். இதனால் தலைவலிதூக்கமின்மை ஏற்படும். இப்படிப்பட்ட கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றவே விபூதி தரிப்பதன் நோக்கம். நெற்றிப்பகுதி அதிக சூடாவதால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிருமித் தொற்றைத் தடுக்கவே மஞ்சள்அதிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம். குங்குமம்சந்தனம்விபூதி ஆகிய மூன்றும் சிறந்த கிருமிநாசினிகள். அதை மறந்து பெண்கள் இன்று மஞ்சள்குங்குமத்தை ஒதுக்கி வருகின்றனர். பெரும்பாலான பெண்கள் ஸ்டிக்கர் பொட்டையே நம்பியிருக்கிறார்கள். ஸ்டிக்கர் பொட்டு உடல்நலனுக்குக் கெடுதியே செய்யும். அதில் தடவியிருக்கும் ஒட்டும்பசை ரசாயனத்தால் ஆனது. இது நெற்றியில் எரிச்சலை ஏற்படுத்தும். மற்றும் சூரிய ஒளி நெற்றிப் பொட்டில் விழுவதைத் தடுத்துவிடும். கண் மற்றும் புருவங்களுக்கு ஸ்டிக்கர் பொட்டு ஆபத்தானது.

மஞ்சள் பூச்சு அன்றைய பெண்களின் அன்றாட வழக்கம். அது அவர்களுக்கு முகப்பொலிவையும்உடல்நலத்தையும் கொடுத்தது. இன்று பல பெண்கள் ரசாயனத்தால் செய்த முக கிரீம்களையே பயன் படுத்துகின்றனர். தங்கள் உடல்நலத்தைத் தாங்களே கெடுத்துக் கொள்கின்றனர். நமது பெண்கள் அன்று தங்கள் கூந்தலைப் பின்னலிட்டுநறுமணமிக்க மலர்களால் அழகுபடுத்தினர். இயற்கையான வாசனையை உடலில் தவழவிட்டனர். கூந்தலில் சூட்டப்படும் நறுமணம் மிக்க மலர்கள் மருத்துவ குணம் கொண்டவை. தலைவாரி பூமுடித்தல் என்பது சுகாதாரமான நோய்தடுப்பு முறை. கூந்தல் முடி உதிர்ந்துஉணவு வழியாக வயிற்றினுள் சென்றால் உடல்நிலை பாதிப்படையும்.

ஆனால் இன்று ஏற்பட்டுள்ள பண்பாட்டுச் சிதைவுகளினால் பெருவாரியான பெண்கள் பின்ன லிட்டு மலர்கள் சூடுவதை மறந்து வருகின்றனர். முடியை ஆங்காங்கே அலங்கோலமாகக் கத்தரித்து பறக்கவிடுவதுதலைவிரி கோலமாகக் காட்சி தருவது தற்போது புதிதாகப் பரவி வரும் கலாச்சாரம்.

அன்று மரண வீட்டில் மட்டுமே பெண்களை தலைவிரி கோலமாகக் காண முடியும். ஆனால் இன்று ஆலயம் முதல் அங்காடி வரை தலைவிரி கோலமாக- மேல்நாட்டு மோகம் மெல்லக் கொல்லும் நஞ்சாக நம்மிடமும் தொற்றிக் கொண்டது.

தாம்பூலத்தில் சிவந்த செவ்விதழ்கள் இன்று ரசாயன நிறக் கட்டிகளால் அல்லற்படுகின்றன. பழமை வாய்ந்த பாரம்பரியக் கலைகள் அழிவின் விளிம்பிற்கே சென்றுவிட்டன. கர்நாடக இசைஇந்துஸ்தானி இசைபரத நாட்டியம் முதலிய பல கலைகள் வெகுசிலரால் மட்டுமே ரசிக்கப்பட்டு வருகின்றன. பாப் பாடல் எனும் பொருள் இல்லாத டப்பாங்குத்துப் பாடல்களுக்கு இளைஞர்களும் இளைஞிகளும் பேயாட்டம் போடுகின்றனர்.

ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஆண்களும் பெண்களும் குடித்து கும்மாள மிட்டதில் பல உயிர்கள் பலிவாங்கப் பட்டதாகச் செய்திகள் வந்தன.

முன்னாளில் பிறந்தநாளின்போது ஆலயம் சென்று ஆண்டவன் சந்நிதியில் தீபமேற்றி வழிபட்டு மங்கலமாகக் கொண்டாடினர். இன்று பிறந்த நாளை கல்யாண மண்டபங்களில் கூட்டத்தைக் கூட்டிசுடரும் ஒளியை வாயினால் ஊதி அணைத்து (அமங்கலமாக) கொண்டாடுகின்றனர். விவாகரத்து என்பதையே கேள்விப்படாத நமக்கு இன்று அது சர்வ சாதாரணமாகி விட்டது.

சில திரைப்படங்களும்தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சில நாடகங்களும் கற்பழிப்புகொலை போன்ற குற்றச் செயல்களைப் புதிய முறைகளில் செய்வது எப்படி என்பதைக் கற்றுத் தரும் பல்கலைக் கழகங்களாக விளங்கி வருகின்றன.

பண்பாட்டில் உயர்ந்த பாரதம் இன்று பண்பாட்டுச் சிதைவில் சிக்கித் தடுமாறுகிறது. இந்த கலாச்சார சீரழிவுகளைத் தடுக்க நமக்கு இன்னும் பல விவேகானந்தர்கள் தேவை!

இந்துக்களின் விஞ்ஞானம் ஜெர்மனியர்களின் ஆராய்ச்சி முடிவு

இந்துதர்மத்தில் ஒளிந்திருக்கும் விஞ்ஞானம்:ஜெர்மனியர்களின் ஆராய்ச்சி முடிவு




சவுந்தர்ய லஹரி என்ற ஒரு பாடல் தொகுப்பு இருக்கின்றது.அதை ஆதிசங்கரர் திருக்கையிலாய மலைக்குச் சென்று சிவபெருமானிடமிருந்து வாங்கி வந்தார்.அதில்தனுர் பவுஷ்பம் மெளர்வி” என்கிற சுலோகத்தை ஒரு லட்சம் தடவை ஜபித்தால் அம்பாளுடைய தரிசனம் ஏதாவது ஒன்று நமது கண்களுக்குத் தெரியும்.

ஒரு ஜெர்மனியன் இதை டெஸ்ட் பண்ணிவிட நினைத்தான்.அவனுக்கு இந்த தனுர் பவுஷ்பம் மெளர்வி என்பதை உச்சரிக்க முடியலை.அதனால்,அவன் ஒரு காரியம் செய்தான்;இந்த சவுந்தர்ய லஹரி வரியை 10 டேப் ரெக்கார்டரில் ரெக்கார்டு செய்து தொடர்ந்து ஒரு லட்சம் தடவை சொல்வது போல் செய்தான்.ஒரு லட்சம் தடவை அந்த டேப்ரிக்கார்டர் சொன்னதும் அந்த டேப்ரிக்கார்டர்கள் பத்தி எரிந்தன;அதில் அம்பாளுடைய வடிவம் வந்தது.இதை நாமும் முயற்சி செய்து பார்க்கலாமே!!!

கேரளாவில் 2000 வாக்க்கில் ஒரு புத்திரகாமேஷ்டி யாகம் செய்தனர்.இருப்பதிலேயே தலைசிறந்த வேத விற்பன்னர்களை அழைத்துவந்து,யாருக்கெல்லாம் குழந்தையில்லையோ அனைவரும் வந்து இந்த யாகத்தில் கலந்துகொள்ளுங்கள் என அழைத்தார்கள்.

யாருக்கெல்லாம் குழந்தையில்லையோ,அவர்களுக்கு எந்தக் காரணத்தினால் குழந்தையில்லை என்ற மெடிக்கல் ரிப்போர்ட்களை எடுத்தார்கள்.அதற்கேற்றாற்போல்,குழந்தையில்லாத தம்பதிகள் 48 நாட்கள் இந்த புத்திரகாமேஷ்டியாகத்தில் கலந்துகொள்ள வேண்டும்.அந்த 48 நாட்களுக்குத் தேவையான உணவு,தங்குமிடம் இலவசமாக அந்த தம்பதிகளுக்குத் தந்தார்கள்.ஒரு ஜெர்மன் ஆய்வுக்குழு இந்தச் செலவுகளை ஏற்றுக்கொண்டனர்.

புத்திரகாமேஷ்டியாகம் முடிந்து சில வருடங்கள் கழிந்தப்பின்னர்,ஒரு சர்வே எடுத்தார்கள்.இந்த யாகத்தில் கலந்துகொண்ட தம்பதிகளில் 100க்கு 90 பேருக்கு ஆன்மீகபூர்வமாக அவர்களுக்கு குழந்தை பிறந்திருந்தன.

Tuesday, June 3, 2014

நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் இந்த அழிந்த சுவடுகளின் வரலாறு

நம்மில் எத்தனை  பேருக்கு தெரியும் இந்த அழிந்த சுவடுகளின் வரலாறு
 நமது ஊரின் மேற்கு திசையில் சுமார் 3.50 கிலோ மீட்டர் தொலைவில் நமது ஊரின் மேற்கு தொடர்ச்சிமலை அமைந்துள்ளது .அங்கே இடைமலை சாஸ்தா ஆலயம் ஓன்று அமைந்துள்ளது .அருகில் 1949 வரை அங்கே காவல் நிலையம் ஓன்று அமைந்திருந்தது அதன் வரலாறு இளைஞர்கள் யாருக்காவது தெரியுமா என்றால் இல்லை .
 அந்த வரலாற்று சுவடுகளை நாமும் தெரிந்து கொள்வோமே ......

நமது ஊரின் மேற்கில் மேற்கு தொடர்ச்சிமலை அமைந்துள்ளது அதில் சுனைக்கரை இசக்கி அம்மன் கோயில் ,பெரியமலை,கழுவாஞ்சி மொட்டை,தலைப்பா கட்டி பொத்தை ,இடைமலை சாஸ்தா கோயில் என்ற பெயரில் அந்த பகுதிகளை நம் மக்கள் கூறிவருகின்றனர் .

அந்த மேற்கு தொடர்ச்சி மலையானது எந்த ஒரு பகுதிலும் வழி இல்லாமல் மிக உயரமான மலையாக திகழ்கிறது .அதில் இடைமலை சாஸ்தா கோயில் இருக்கும் பகுதியில் மட்டும் இரண்டு மலைகளுக்கு இடையே பாதை உள்ளது .அந்த பகுதியில்தான் நான் கூறிய காவல் நிலையம் அமைந்திருந்தது ,

அந்த காவல்நிலையம் அமைத்தற்கான காரணங்கள் கிழே .........

1956 ம் வருடம் நவம்பர் 1ம் தியதி கன்னியாகுமரி கேரளாவிலிருந்து தனியாக பிரிக்கப்பட்டது அதற்கு முன் வரை நமது மேற்கு தொடர்ச்சி மலையின்  மேற்கு அதாவது இடைமலை சாஸ்தா கோயில் வரை கேரளா எல்லையாக இருந்து வந்தது அந்த சமயத்தில் இப்பகுதிகள் கேரளாவை ஆண்டு வந்தவர்  திருவிதாங்கூர்  மகாராஜா மார்த்தாண்ட வர்மா அவர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது ,

அந்த சமயத்தில் மலைக்கு மறுபுறம் கேரளா எல்லை அல்லவா நமது ஊர் இருக்கும் இடம் திருநெல்வேலி அல்லவா ,கேரளாவிலிருந்து நமது பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் பல பொருள்களை இந்த வழியாகத்தான் கடத்தி வந்திருக்கிறார்கள் ,அந்த கடத்தல் கும்பலை பிடிக்கும் பொருட்டு இந்த காவல் நிலையம் அமைக்கப்பட்டதாக நமது ஊர் பெரியவர்கள் கூறுகின்றனர் .அதன் பக்கத்தில் எல்லைகாவலாக அருமையான சாஸ்தா ஆலயம் ஒன்றையும் அருமையாக அமைத்திருக்கிறார்கள் .

தற்போதைய செய்திகள் :

இந்த சாஸ்தா ஆலயத்தின் அருகில் வரை இரு சக்கர வாகனங்களில் செல்லும் பொருட்டு அருமையான பாதை தற்போது அமைத்திருக்கிறார்கள்.
தற்போது தூத்துகுடி முதல் திருவனந்தபுரம் வரை உள்ள நான்குவழிச் சாலை இந்த வழியாகத்தான் வருவதாக பேசி வருகிறார்கள்.இந்த நான்கு வழிச் சாலை வந்தால் மகாராஜபுரம் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை .
அதன் புகைப்படங்கள் .......

அழிந்த நிலையில் காவல்நிலைய கட்டிடம் 
காவல்நிலைய கட்டிடம் 
காவல்நிலைய கட்டிடம் 


அங்குள்ள கிணறு 
காவல்நிலைய கட்டிடம் 

சாஸ்தா ஆலயம் 




மலைத்தொடர் 



இரண்டு மலைகளின் இடைவெளி