Tuesday, June 3, 2014

நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் இந்த அழிந்த சுவடுகளின் வரலாறு

நம்மில் எத்தனை  பேருக்கு தெரியும் இந்த அழிந்த சுவடுகளின் வரலாறு
 நமது ஊரின் மேற்கு திசையில் சுமார் 3.50 கிலோ மீட்டர் தொலைவில் நமது ஊரின் மேற்கு தொடர்ச்சிமலை அமைந்துள்ளது .அங்கே இடைமலை சாஸ்தா ஆலயம் ஓன்று அமைந்துள்ளது .அருகில் 1949 வரை அங்கே காவல் நிலையம் ஓன்று அமைந்திருந்தது அதன் வரலாறு இளைஞர்கள் யாருக்காவது தெரியுமா என்றால் இல்லை .
 அந்த வரலாற்று சுவடுகளை நாமும் தெரிந்து கொள்வோமே ......

நமது ஊரின் மேற்கில் மேற்கு தொடர்ச்சிமலை அமைந்துள்ளது அதில் சுனைக்கரை இசக்கி அம்மன் கோயில் ,பெரியமலை,கழுவாஞ்சி மொட்டை,தலைப்பா கட்டி பொத்தை ,இடைமலை சாஸ்தா கோயில் என்ற பெயரில் அந்த பகுதிகளை நம் மக்கள் கூறிவருகின்றனர் .

அந்த மேற்கு தொடர்ச்சி மலையானது எந்த ஒரு பகுதிலும் வழி இல்லாமல் மிக உயரமான மலையாக திகழ்கிறது .அதில் இடைமலை சாஸ்தா கோயில் இருக்கும் பகுதியில் மட்டும் இரண்டு மலைகளுக்கு இடையே பாதை உள்ளது .அந்த பகுதியில்தான் நான் கூறிய காவல் நிலையம் அமைந்திருந்தது ,

அந்த காவல்நிலையம் அமைத்தற்கான காரணங்கள் கிழே .........

1956 ம் வருடம் நவம்பர் 1ம் தியதி கன்னியாகுமரி கேரளாவிலிருந்து தனியாக பிரிக்கப்பட்டது அதற்கு முன் வரை நமது மேற்கு தொடர்ச்சி மலையின்  மேற்கு அதாவது இடைமலை சாஸ்தா கோயில் வரை கேரளா எல்லையாக இருந்து வந்தது அந்த சமயத்தில் இப்பகுதிகள் கேரளாவை ஆண்டு வந்தவர்  திருவிதாங்கூர்  மகாராஜா மார்த்தாண்ட வர்மா அவர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது ,

அந்த சமயத்தில் மலைக்கு மறுபுறம் கேரளா எல்லை அல்லவா நமது ஊர் இருக்கும் இடம் திருநெல்வேலி அல்லவா ,கேரளாவிலிருந்து நமது பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் பல பொருள்களை இந்த வழியாகத்தான் கடத்தி வந்திருக்கிறார்கள் ,அந்த கடத்தல் கும்பலை பிடிக்கும் பொருட்டு இந்த காவல் நிலையம் அமைக்கப்பட்டதாக நமது ஊர் பெரியவர்கள் கூறுகின்றனர் .அதன் பக்கத்தில் எல்லைகாவலாக அருமையான சாஸ்தா ஆலயம் ஒன்றையும் அருமையாக அமைத்திருக்கிறார்கள் .

தற்போதைய செய்திகள் :

இந்த சாஸ்தா ஆலயத்தின் அருகில் வரை இரு சக்கர வாகனங்களில் செல்லும் பொருட்டு அருமையான பாதை தற்போது அமைத்திருக்கிறார்கள்.
தற்போது தூத்துகுடி முதல் திருவனந்தபுரம் வரை உள்ள நான்குவழிச் சாலை இந்த வழியாகத்தான் வருவதாக பேசி வருகிறார்கள்.இந்த நான்கு வழிச் சாலை வந்தால் மகாராஜபுரம் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை .
அதன் புகைப்படங்கள் .......

அழிந்த நிலையில் காவல்நிலைய கட்டிடம் 
காவல்நிலைய கட்டிடம் 
காவல்நிலைய கட்டிடம் 


அங்குள்ள கிணறு 
காவல்நிலைய கட்டிடம் 

சாஸ்தா ஆலயம் 




மலைத்தொடர் 



இரண்டு மலைகளின் இடைவெளி 


No comments:

Post a Comment